< Back
சினிமா செய்திகள்
கவின் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சினிமா செய்திகள்

கவின் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தினத்தந்தி
|
23 Jan 2025 8:51 AM IST

சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

சென்னை,

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான 'லிப்ட், டாடா, ஸ்டார்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சமீபத்தில் வெளியான 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில் இவர் தற்போது பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி பிரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.'டாடா' திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்னும் அதிகாரபூர்வமாக படத்தின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் படத்திற்கு 'கிஸ்' என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் ராகுல் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை மார்ச் மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்