< Back
சினிமா செய்திகள்
புற்றுநோயில் இருந்து மீண்ட சிவராஜ்குமார்...வீடியோ வெளியிட்டு உருக்கம்
சினிமா செய்திகள்

புற்றுநோயில் இருந்து மீண்ட சிவராஜ்குமார்...வீடியோ வெளியிட்டு உருக்கம்

தினத்தந்தி
|
2 Jan 2025 7:06 AM IST

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவர் 1974ல் வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாண' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தற்போதுவரை 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 'ஜெயிலர்' படத்தில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு (62) புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சிவராஜ்குமார் சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்த பித்தப்பை அகற்றப்பட்டது. இந்நிலையில், புளோரிடாவின் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (எம்சிஐ) அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு அவர் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சிவ ராஜ்குமார் தனது மீட்பு பயணம் குறித்து பேசினார். "நான் முன்பு கூட பயந்தேன், ஆனால் ரசிகர்கள், உறவினர்கள், சக கலைஞர்கள் மற்றும் மருத்துவர்கள் - குறிப்பாக எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷஷிதர் என்னை வலிமையாக்கினார்," என்று அவர் கூறினார்.

மேலும் சிகிச்சையின் போது துணையாக நின்ற தனது மனைவி கீதா உள்ளிட்டோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். "எனது உறவினர், மனைவி கீதா என்னை மிகவும் கவனித்துக் கொண்டார்கள். மியாமி புற்றுநோய் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் முழு ஊழியர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தனர்," என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்