< Back
சினிமா செய்திகள்
தளபதி 69 படத்தில் கேமியோ ரோலில் சிவராஜ் குமார்
சினிமா செய்திகள்

'தளபதி 69' படத்தில் கேமியோ ரோலில் சிவராஜ் குமார்

தினத்தந்தி
|
13 Nov 2024 7:03 AM IST

'தளபதி 69' படக்குழுவினர் சிவராஜ் குமாரை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் 'தளபதி 69' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் நேரில் சந்தித்ததாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய நடிகர் சிவராஜ்குமார், "விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தித்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். எனது தேதிகள் சார்ந்த விஷயங்களால் இது எப்படி முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், நடிகர் விஜய் நல்ல மனிதர், சிறப்பான நடிகர். சினிமா மற்றும் அரசியல் சார்ந்த அவரின் முடிவு அற்புதமானது. இவை இரண்டையும் நான் மதிக்கிறேன்," என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்