< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
ஓடிடியில் வெளியான 'சர்மாஜி கி பேட்டி'
|2 July 2024 12:52 PM IST
நடிகை திவ்யா தத்தாவின் 'சர்மாஜி கி பேட்டி' படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
சென்னை,
பாலிவுட் நடிகைகளில் ஒருவர் திவ்யா தத்தா. பஞ்சாபைச் சேர்ந்த இவர் ஏராளமான பஞ்சாபி படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 'பாக் மில்கா பாக்,' 'டெல்லி-6', 'வீர்-ஜாரா,' போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
தற்போது இவர் 'சர்மாஜி கி பேட்டி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஸ்மான் குரானாவின் மனைவி தாகிரா காஷ்யப் இயக்கியுள்ளார். இதன் மூலம் இவர் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
இந்தப்படத்தில் சயாமி கெர், சாக்சி தன்வார், ஷரீப் ஹாஷ்மி மற்றும் பர்வீன் தபாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் கடந்த 28-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.