< Back
சினிமா செய்திகள்
Shah Rukh Khan to play a cameo role - do you know in which film?
சினிமா செய்திகள்

கேமியோ ரோலில் நடிக்கும் ஷாருக்கான் - எந்த படத்தில் தெரியுமா?

தினத்தந்தி
|
23 Nov 2024 8:00 AM IST

இதற்கு முன்பு ஷாருக்கான், கடந்த 2022-ம் ஆண்டு ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த பிரமாஸ்திரா படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

மும்பை,

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் கடைசியாக 'ஹீரமண்டி' என்ற வெப் சீரிசை இயக்கி இருந்தார். இதனையடுத்து பன்சாலி, 'லவ் அண்ட் வார்' என்ற படத்தை இயக்குகிறார். இதில், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதற்கு முன்பு கடந்த 2007-ம் ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'சாவரியா' படத்தை பன்சாலி இயக்கி இருந்தார். இதனையடுத்து சுமார் 18 வருடங்களுக்கு பிறகு பன்சாலியுடன் ரன்பீர் கபூர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இப்படத்தின் இரண்டாம் பாதியில் ஷாருக்கான் ரன்பீர் கபூருடன் திரையில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஷாருக்கான் , கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பில்லு படத்திலும், கடந்த 2022-ம் ஆண்டு இதே ரன்பீர்கபூர், ஆலியா பட் நடித்த பிரமாஸ்திரா படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்