'அவர் என் மனதை கொஞ்சம் கொஞ்சமாக...'- நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்
|நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனக்கு பிடித்த நடிகர், படம் குறித்து பேசினார்.
சென்னை,
ரவி தேஜா நடிக்கும் 'மிஸ்டர் பச்சன் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் பாக்யஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இதில் பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். தற்போது இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில்
தற்போது நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனக்கு பிடித்த நடிகர், படம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
'எனக்கு ஷாருக்கான் படங்கள் மிகவும் பிடிக்கும். அவர் ரொமான்ஸ்க்கு பேர் போனவர். அவர் என் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கெடுக்கிறார், என்றார்.மேலும், கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டரான 'கதார் 2' படத்திற்கான ஆடிஷனில் தான் கலந்துகொண்டதாகவும் கூறினார்