ஒரு வருடத்தை நிறைவு செய்த 'ஜவான்' - வீடியோ பகிர்ந்த ஷாருக்கான்
|வீடியோ பகிர்ந்து ஜவானின் ஒரு வருட நிறைவை கொண்டாடிய ஷாருக்கான்.
மும்பை,
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீசில் கலக்கியது. 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,143.59 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், நேற்றுடன் இப்படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்தது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் ஷாருக்கான் வீடியோ பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில்,
''ஜவான்' ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. அட்லியின் திறமை, தொலைநோக்கு பார்வை இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை. இந்தப் படத்தை உருவாக்க உழைத்த குழுவினருக்கு எனது அன்பை தெரிவித்துக்கொள்கிறேன். படத்தை இவ்வளவு அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி, ' இவ்வாறு தெரிவித்துள்ளார்.