< Back
சினிமா செய்திகள்
ஷாருக்கான், சல்மான்கான் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் படம் ரீ-ரிலீஸ்
சினிமா செய்திகள்

ஷாருக்கான், சல்மான்கான் இணைந்து நடித்த "கரண் அர்ஜுன்" படம் ரீ-ரிலீஸ்

தினத்தந்தி
|
18 Nov 2024 4:22 PM IST

'கரண் அர்ஜுன்' படத்தில் ஹிருத்திக் ரோஷன் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் நடிப்பில் கடந்த 1995-ல் வெளியான திரைப்படம் 'கரண் அர்ஜுன்'. இதில் இவர்கள் இருவரும் சகோதரர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கஜோலும், மம்தா குல்கர்னியும் நடித்துள்ளனர். ராகேஷ் ரோஷன் இயக்கியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்படம் மறுபிறவி மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. ரூ.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.43 கோடி வசூலித்து பெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தில் உதவி இயக்குனராக நடிகர் ஹிருத்திக் ரோஷன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இப்படம் வருகிற 22-ந் தேதி உலகளவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மீண்டும் இப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையில் சமீபத்தில் இப்படத்தின் புதிய டிரெய்லரை ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் மற்றும் சல்மான் ஆகியோர் தங்களின் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்