'சீசா' படத்தின் 'பொங்கலோ பொங்கல்' பாடல் வெளியானது
|கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'சீசா' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
சென்னை,
விஜய் நடித்த 'யூத்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் நட்டி நட்ராஜ். இவர் தற்போது நடிகராக வலம் வருகிறார். இவர் 'கர்ணன்', 'மகாராஜா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் தற்போது கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'சீசா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நிஷாந்த் ரூசோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடினி குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.
விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கா.செந்தில் வேலன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜிடம் பணிபுரிந்த சரண்குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'சீசா' படத்தின் 2வது பாடலான 'பொங்கலோ பொங்கல்' வெளியாகியுள்ளது.