< Back
சினிமா செய்திகள்
சல்மான்கானின் சிக்கந்தர் படத்தில் இணைந்த நடிகர் சத்யராஜ்
சினிமா செய்திகள்

சல்மான்கானின் 'சிக்கந்தர்' படத்தில் இணைந்த நடிகர் சத்யராஜ்

தினத்தந்தி
|
4 July 2024 5:27 PM IST

சல்மான்கான் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சன்மான்கான் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சிக்கந்தர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு "புராணக் கதை' படமாகும். இப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இப்படத்திற்கான புதிய அப்டேட்டை படக்குழுவினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யராஜை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இந்தப்படத்தில் நடிகர் பிரதீக் பாப்பரும் இணைத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதற்கிடையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சிகந்தர்' படத்தின் படப்பிடிப்பு ஜூன் 19 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப்படத்தினை 2025-ம் ஆண்டு ரமலான் அன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்னனர்.


மேலும் செய்திகள்