விஜய், பிரபாஸ் பெரிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது ஏன்? - சத்யராஜ் விளக்கம்
|பன்முகத்தன்மை என்பது இன்று இருக்கும் நட்சத்திரங்களுக்கிடையில் அரிதாகிவிட்டது என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள பிரபல நடிகர் சத்யராஜ். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெப்பன். இதில் சத்யராஜுடன் இணைந்து வசந்த் ரவி, தான்யா ஹோப் ராஜுவ் மேனன், ராஜிவ் பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் மற்றும் பிரபாஸ் பெரிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து பேசினார். அவர் பேசியதாவது,
பன்முகத்தன்மை என்பது இன்று இருக்கும் நட்சத்திரங்களுக்கிடையில் அரிதாகிவிட்டது. உலகம் வளர்ந்து வருவதே அதற்குக் காரணம். 'லவ் டுடே', 'காதலுக்கு மரியாதை' போன்ற கிளாசிக் படங்களில் விஜய் நடித்துள்ளார், ஆனால் இன்று அது பலிக்காது, அவர் பெரிய நட்சத்திரமாகிவிட்டதால், மீண்டும் அப்படிப்பட்ட படங்களை அவரை வைத்து தயாரிக்க முடியாது.
'பாகுபலி' படத்தால், இன்றைய சினிமாவில் பிரபாசால் பெரிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும். இவ்வாறு கூறினார். நடிகர் சத்யராஜ் விஜய்யுடன் இணைந்து தலைவா படத்திலும், நடிகர் பிரபாசுடன் பாகுபலி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.