< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது

தினத்தந்தி
|
20 Oct 2024 4:58 PM IST

சசிகுமார் நடித்துள்ள 'பிரீடம்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 'ப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். சிநேகன், மோகன் ராஜா பாடல்களை எழுதுகின்றனர். படம் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

விஜய கணபதி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆயுதபூஜையை முன்னிட்டு சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வது போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இயக்குநரான சசிகுமார் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கருடன் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரீடம் படத்தின் கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால், அப்போது தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்