< Back
சினிமா செய்திகள்
குற்றப்பரம்பரை நாவலை தழுவி வெப் தொடர் இயக்கும் சசிகுமார்
சினிமா செய்திகள்

'குற்றப்பரம்பரை' நாவலை தழுவி வெப் தொடர் இயக்கும் சசிகுமார்

தினத்தந்தி
|
16 March 2025 7:42 PM IST

நடிகர் சண்முக பாண்டியனை கதாநாயகனாக வைத்து இந்த தொடர் உருவாக உள்ளது.

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் வெளியான 'அயோத்தி' 'கருடன், நந்தன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து தற்போது 'டூரிஸ்ட் பேமிலி, மை லார்ட்' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையே, நடிகரும் இயக்குனருமான சசிகுமார், குற்றப்பரம்பரை நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு முன் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலா இதனை இயக்க திட்டமிட்டிருந்தனர். பின்னர் அதனை அவர்கள் கைவிட்டனர். நாவலின் காப்புரிமையைப் பாலாவிடம் இருந்து சசிகுமார் பெற்றுக் கொண்டார். இதில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், 'குற்றப்பரம்பரை' நாவலை தழுவி சசிக்குமார் விரைவில் வெப் தொடர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு காரணத்தினால் தாமதமான இந்த வெப் தொடருக்கான படப்பிடிப்பு பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. சசிகுமார் மீண்டும் இயக்குனராக மாற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

மேலும் செய்திகள்