இனிவரும் ஒவ்வொரு வாரமும் சரவெடி அப்டேட்டுகள் - 'டிராகன்' படக்குழு
|இனிவரும் ஒவ்வொரு வாரமும் அப்டேட்டுகள் கொடுக்கப்படும் என 'டிராகன்' பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.
இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்நிலையில், டிராகன் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், இனிவரும் ஒவ்வொரு வாரமும் சரவெடி அப்டேட்கள் கொடுக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.