< Back
சினிமா செய்திகள்
Sarathkumar met Chandrababu Naidu and gave his daughters wedding invitation
சினிமா செய்திகள்

சந்திரபாபு நாயுடுவை சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கிய சரத்குமார்

தினத்தந்தி
|
10 Jun 2024 9:02 AM IST

வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2-ம் தேதி) தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படம் வரலட்சுமிக்கு சிறந்த கம்பேக்காக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் வேதா, சர்கார் போன்ற பல படங்களில் குணசித்திர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து மிரட்டி இருந்தார்.

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2-ம் தேதி) தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சரத்குமார் குடும்பத்தினர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கினர். இந்த அழைப்பிதழ் வழங்கிய புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்