சாரா அலி கான் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இணையும் முதல் படம்?
|சித்தார்த் மல்ஹோத்ராவின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'யோதா'. இதில், ராசி கன்னா, திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதனையடுத்து, சித்தார்த் மல்ஹோத்ராவின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'வ்வான்: போர்ஸ் ஆப் தி பாரெஸ்ட்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தீபக் மிஸ்ரா இயக்கவுள்ளார்.
இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. அதனுடன் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், இப்படத்தில் சித்தார்த்துடன் சாரா அலி கான் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. நெட்பிக்ஸ் திரைப்படமான 'மர்டர் முபாரக்'கில் கடைசியாக நடித்திருந்த சாரா அலி கான் இப்படத்தில் நடித்தால், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.