< Back
சினிமா செய்திகள்
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படப்பிடிப்பு நிறைவு!
சினிமா செய்திகள்

சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படப்பிடிப்பு நிறைவு!

தினத்தந்தி
|
29 Jan 2025 3:03 PM IST

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ந்தனர். மேலும், இப்படம் மே மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்