"ராஜாகிளி" படத்தின்'ரவுண்டு தி கிளாக்' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது
|சமுத்திரக்கனி, தம்பி ராமையா இணைந்து நடித்துள்ள "ராஜாகிளி" படம் கடந்த 27-ந் தேதி வெளியானது.
சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'கருடன், நந்தன், ஹிட் லிஸ்ட்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்துள்ள 'ராஜாகிளி' படம். இந்த படத்திற்கு தம்பி ராமையா கதை, வசனம் எழுதியுள்ளார். அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் கடந்த 27-ந் தேதி வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் 'ரவுண்டு தி கிளாக்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை தம்பி ராமையா எழுதி, பாடியுள்ளார்.