சிட்டாடல் ஹனி பனி: தனக்கு பதிலாக 2 முன்னணி நடிகைகளை பரிந்துரைத்த சமந்தா
|சிட்டாடல் ஹனி பனி தொடரில் நடிக்க விரும்பாமல் 2 முன்னணி நடிகைகளை சமந்தா பரிந்துரைத்திருக்கிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.
தற்போது, இவர் ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரின் இந்தி பதிப்பான 'சிட்டாடல் ஹனி பனி'யில் நடித்துள்ளார். இதில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள இந்த தொடர், கடந்த 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, இந்த தொடரில் நடிக்க விரும்பாமல் நடிகை கியாரா அத்வானி மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர்களை பரிந்துரைத்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இது வெப் சீரிஸ் என்பதால், உடலளவில் என்னால் சமாளிக்க முடியுமா? ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?, இல்லை அவர்களின் கிண்டலுக்கு ஆளாக நேரிடுமா? என்கிற சந்தேகம் உள்ளே இருந்தது. அதனால் எனக்கு பதிலாக கியாரா அத்வானி மற்றும் கிருத்தி சனோன் ஆகியோரின் புகைப்படங்களை இயக்குனர்களிடம் காட்டி இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்யும்படி கூறினேன்.
ஆனால் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே, உங்களால் முடியும் நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்று ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தனர்' என்றார்