< Back
சினிமா செய்திகள்
பூனையுடன் ரெட் லைட் தெரபி  எடுக்கும் சமந்தா - வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

பூனையுடன் 'ரெட் லைட் தெரபி ' எடுக்கும் சமந்தா - வீடியோ வைரல்

தினத்தந்தி
|
8 Jun 2024 1:19 PM IST

நடிகை சமந்தா ரெட் லைட் தெரபி எடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சினிமாவை விட்டும் சில மாதங்கள் ஒதுங்கியும் இருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, தற்போது ரெட் லைட் தெரபி சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தெரபி மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த தெரபியை தனது பூனையுடன் சேர்ந்து சமந்தா எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'ரெட் லைட் தெரபி டேட்' என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்