< Back
சினிமா செய்திகள்
Samantha is the only star to get it after Rajinikanth - Director Trivikram
சினிமா செய்திகள்

'ரஜினிகாந்திற்கு பிறகு அதனை பெற்ற ஒரே நட்சத்திரம் சமந்தாதான்' - இயக்குனர் திரிவிக்ரம்

தினத்தந்தி
|
9 Oct 2024 8:37 AM IST

நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜிக்ரா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இந்நிலையில், நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜிக்ரா' படத்தில் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் இதில், நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆலியாபட் 'திரையில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் நீங்கள் ஒரு ஹீரோ' என்று சமந்தாவை பாராட்டினார். மேலும், 'திரிவிக்ரம் சார் இயக்கும் படத்தில் நானும் சமந்தாவும் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்றும் கூறினார்.

பின்னர், இயக்குனர் திரிவிக்ரம் பேசுகையில், 'அனைத்து மொழிகளிலும் பரவலான புகழை ரஜினிகாந்திற்கு பிறகு சமந்தா மட்டுமே பெற்றுள்ளார்' என்றார்.

மேலும் செய்திகள்