'புஷ்பா 2' படத்தில் பணிபுரிந்துள்ளதை உறுதிப்படுத்திய சாம் சி.எஸ்
|புஷ்பா 2: தி ரூல் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளை சந்திரபோஸ் எழுத தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2: தி ரூல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளை சந்திரபோஸ் எழுத தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மேலும், தமன் எஸ், சாம் சிஎஸ் மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இணைந்து படத்தின் பின்னணி இசையமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இப்படம் நாளை வெளியாக உள்ளநிலையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசையில் பணியாற்றியதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,
"புஷ்பா 2 உடனான எனது பயணம் மிகப்பெரியது. பின்னணி இசைக்காக என்னை தேர்ந்தெடுத்து இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி.
இயக்குனர் சுகுமாருடன் இணைந்து பணியாற்றியது ஒரு புதுமையான அனுபவம். குறிப்பாக சண்டைக்காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் அவருடன் பணிபுரிந்தது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நன்றி' இவ்வாறு தெரிவித்துள்ளார்.