< Back
சினிமா செய்திகள்
சல்மான்கானுக்கு மிரட்டல்: காய்கறி வியாபாரி கைது
சினிமா செய்திகள்

சல்மான்கானுக்கு மிரட்டல்: காய்கறி வியாபாரி கைது

தினத்தந்தி
|
24 Oct 2024 4:05 AM IST

சல்மான்கானுக்கு மிரட்டல் விடுத்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான்கான். இவருக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷோனி கும்பல் மிரட்டல் விடுத்து வருகிறது. சமீபத்தில் தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். சல்மான்கானுக்கு மிகவும் நெருக்கமானவரான பாபா சித்திக் கொல்லப்பட்ட நிலையில் பதற்றம் அதிகரித்தது. சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த காய்கறி வியாபாரியை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். சல்மான்கான் 5 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் அவரை கொலை செய்துவிடுவேன் என்று மும்பை போக்குவரத்து போலீசுக்கு வாட்ஸ் அப் மெசேஜில் மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஜார்க்கண்டின் ஜம்ஷத்பூரில் காய்கறி கடை வைத்துள்ள ஷேக் ஹசன் ஷேக் முசின் (வயது 24) என்ற வியாபாரியை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்