< Back
சினிமா செய்திகள்
Salman Khan in Keerthy Sureshs Baby John?
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷின் 'பேபி ஜான்' படத்தில் கேமியோ ரோலில் சல்மான் கான்?

தினத்தந்தி
|
5 Oct 2024 1:33 PM IST

வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் படம் 'பேபி ஜான்'.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைதொடர்ந்து, ஜவான் இயக்குனர் அட்லீ படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் கமல்ஹாசனும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சல்மான் கான் ரசிகர்களுக்கு ஒரு நல்ல தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் படமான 'பேபி ஜான்' படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கான படப்பிடிப்பை இந்த வாரத்தில் அவர் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் செய்திகள்