< Back
சினிமா செய்திகள்
சிங்கம் அகெய்ன் படத்தில் கேமியோ ரோலில் சல்மான் கான்
சினிமா செய்திகள்

'சிங்கம் அகெய்ன்' படத்தில் கேமியோ ரோலில் 'சல்மான் கான்'

தினத்தந்தி
|
24 Oct 2024 7:01 AM IST

அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சிங்கம் அகெய்ன்' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.

மும்பை,

தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைதொடர்ந்து அந்தப்படம் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் "சிங்கம்" என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார்.

இதில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து, இரண்டாம் பாகமாக 'சிங்கம் ரிட்டன்ஸ்' என்கிற படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி, தற்போது 'சிங்கம் அகெய்ன்' என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்க கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்படத்தில் முதலில் சுல்புல் பாண்டே கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் சல்மான்கான். ஆனால், சமீபத்தில் சல்மான்கானுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், நண்பர் பாபா சித்திக் கொலை உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களால் 'சிங்கம் அகெய்ன்' படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்றி விட வேண்டும் என்ற முனைப்பில், 'சிங்கம் அகெய்ன்' படப்பிடிப்பு நேற்றுமுன்தினம் மும்பையில் நடைபெற்றது. இதில் சல்மான்கான் கலந்து கொண்டு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்