< Back
சினிமா செய்திகள்
அட்லீயின் இயக்கத்தில் சல்மான் கான்... இதுதான் கதையா?
சினிமா செய்திகள்

அட்லீயின் இயக்கத்தில் சல்மான் கான்... இதுதான் கதையா?

தினத்தந்தி
|
23 Nov 2024 10:26 AM IST

நடிகர் சல்மான் கானை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை அட்லீ இயக்க உள்ளார்.

சென்னை,

'ராஜா ராணி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' என மூன்று பிளாக்பஸ்டர் படங்களையும் இயக்கினார். இந்த மூன்று படங்களையும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அடுத்ததாக 2023-ம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கினார். இப்படம் ரூ1,200 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர்.

தற்போது, அட்லீயின் 6-வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஒரு வருடமாக செய்து வருகிறார் அட்லீ. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. பெயரிடப்படாத இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. 'ஜவான்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

இது இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை கொண்ட இந்த கதைக்கு மற்றொரு பெரிய ஹீரோ தேவைப்படுவதால், அட்லீ அந்த கதாபாத்திரத்திற்காக ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகிய இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் உருவாகும் மறுபிறவி பற்றிய அதிரடி படமாக உருவாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்