< Back
சினிமா செய்திகள்
சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வொர்க் அவுட் வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வொர்க் அவுட் வீடியோ வைரல்

தினத்தந்தி
|
28 Jun 2024 4:00 PM IST

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது வொர்க் அவுட் செய்த வீடியோவை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது.

மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் போட்டோ சூட் நடத்தியும் பிரபலமான கவர்ச்சி மாடல் அழகியாக தென்பட்டு வந்தார் . முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றிய சாக்ஷி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தொடங்கியதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். இதனிடையே அட்லீ இயக்கத்தில் 2013 -ம் ஆண்டு வெளியான "ராஜா ராணி" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார். அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் விஸ்வாசம் , சிண்ட்ரல்லா , அரண்மனை 3, காலா உள்ளிட்ட திரைப்படங்களிலிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட சாக்ஷி அகர்வால், இதே போன்று வொர்க் அவுட் செய்து, என்னை டேக் செய்யுங்கள் என தலைப்பிட்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மேலும் செய்திகள்