< Back
சினிமா செய்திகள்
Sai Pallavis next project to be backed by THIS Bollywood superstar?
சினிமா செய்திகள்

அடுத்த படத்தில் அமீர்கானுடன் இணையும் சாய்பல்லவி ? - அமரன் இயக்குனர் பகிர்ந்த தகவல்

தினத்தந்தி
|
6 Nov 2024 12:30 PM IST

'அமரன்' படத்தில் இந்து ரெபேக்காவாக நடித்திருக்கும் சாய்பல்லவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சென்னை,

நடிகை சாய்பல்லவி, தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம் இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இந்துவாக நடித்திருக்கும் சாய்பல்லவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமரன் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சாய்பல்லவி அடுத்ததாக அமீர்கானுடன் இணைந்துள்ளதாக கூறினார். அதன்படி, அமீர்கான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தில் நடிகை சாய்பல்லவி நடித்துவருவதாகவும், இந்தியில் உருவாகிவரும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.

சாய்பல்லவி ஏற்கனவே, நிதிஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் 'ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 1-ம் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்