< Back
சினிமா செய்திகள்
அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி
சினிமா செய்திகள்

அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி

தினத்தந்தி
|
1 Jan 2025 9:06 AM IST

நடிகை சாய் பல்லவிக்கு ஜோடியாக ஜுனைத் கான் நடிக்க உள்ளார்.

சென்னை,

பிரபல பாலிவுர் நடிகர் அமீர்கான். இவரது மகன் ஜுனைத் கான். இவர் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான மகாராஜ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத்தொடர்ந்து, தமிழில் பிரதீப் ரங்கனாந்தன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 'லவ்யப்பா' எனப்பெயரிடபட்டுள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனையடுத்து, நடிகை சாய் பல்லவிக்கு ஜோடியாக ஜுனைத் கான் நடிக்க உள்ளார். இப்படத்தை அமீர்கான் தயாரிக்க, சுனில் பாண்டே இயக்க உள்ளார். சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்