< Back
சினிமா செய்திகள்
Sai Pallavi starring Ramayana Release date announced
சினிமா செய்திகள்

சாய் பல்லவி சீதையாக நடிக்கும் 'ராமாயணம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Nov 2024 11:41 AM IST

சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான 'அமரன்' படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

சென்னை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் 'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை உருவாக்குகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும்நிலையில், அதிலிருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைதளத்தில் கசிந்து வைரலாகின.

இப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது இப்படத்தின் 2 பாகங்களில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான 'அமரன்' படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளநிலையில், சாய் பல்லவி சீதையாக நடிக்கும் 'ராமாயணம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடையவைத்துள்ளது.

மேலும் செய்திகள்