< Back
சினிமா செய்திகள்
Sai Pallavi starrer Thandel after Amaran: Update on first song
சினிமா செய்திகள்

அமரனைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிக்கும் 'தண்டேல்': முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியானது

தினத்தந்தி
|
16 Nov 2024 8:01 AM IST

'தண்டேல்' படத்தின் முதல் பாடலான 'புஜ்ஜி தல்லி' குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சென்னை,

அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

சேகர் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரியும் இப்படத்தின் சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பு 1,000 நடனக் கலைஞர்களுடன் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'புஜ்ஜி தல்லி' குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்பாடல் இந்த மாதத்தில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. 'தண்டேல்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்