< Back
சினிமா செய்திகள்
வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை -  நடிகை சாய் பல்லவி
சினிமா செய்திகள்

வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை - நடிகை சாய் பல்லவி

தினத்தந்தி
|
12 Dec 2024 5:59 PM IST

பிரபல நடிகை சாய் பல்லவி தன்னை பற்றி வதந்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் அவர் இந்த வருடம் சிவகார்த்திகேயனுடன் நடித்த 'அமரன்' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.

நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் 'ராமாயணா' புராணக் கதையில் சீதையாக நடிக்கவுள்ளார். அந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக நடிகர் யாஷும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சாய் பல்லவி குறித்து தனியார் ஊடகம் வெளியிட்ட பதிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் வெளியிட்ட பதிவில், "பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் இப்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி. அதற்காக, படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவுகள் எதையும் தொடுவதில்லை என உறுதி எடுத்திருக்கிறார். எனவே, ஹோட்டலில் கூட சாப்பிடாமல், வெளியூர்களுக்குச் செல்லும் போது கையோடு சமையல்காரர்களை அழைத்து செல்கிறார். அவர்கள் சைவமாகச் சமைத்து கொடுக்கிறார்கள்" என கூறியுள்ளனர்.

இது குறித்து சாய் பல்லவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் எப்போதும் வதந்திகளுக்கும் தவறான அறிக்கைகளையும் கண்டு கொள்வதில்லை. அது கடவுளுக்கு தெரியும். ஆனால் வதந்திகள் குறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. குறிப்பாக எனது படம் வெளியாகும் போதும், அறிவிப்பு வெளியாகும் போதும் இது போன்ற வந்ததிகள் பரப்பப்படுகிறது. அடுத்த முறை ஒரு நம்பிக்கைக்குரிய ஊடகம் அல்லது சமூக ஊடக பக்கங்கள், இது போன்ற தவறான செய்தி, வதந்தியை பரப்பினால் எனது சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.

சாய் பல்லவியின் பதிவு சமூக வலைதள பக்கத்தில் பேசு பொருளாகியுள்ளது.

மேலும் செய்திகள்