மலையாளத்தில் பேச பயப்படும் சாய்பல்லவி - ஏன் தெரியுமா?
|தீபாவளியன்று வெளியான 'அமரன்' படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
சென்னை,
கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. இப்படத்தில் இவர் நடித்திருந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் தியா, தனுஷ் ஜோடியாக மாரி 2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடித்தார்.
தற்போது இவர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியானது. வெளியாகி 4 நாட்களை கடந்துள்ளநிலையில், இப்படம் ரூ.83 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரூ.100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் வெளியாவதற்கு முன்பு கொச்சியில் படக்குழு புரமோசன் பணியில் ஈடுபட்டது. அப்போது பேசிய சாய்பல்லவி மலையாளத்தில் பேச பயமாக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், 'மலையாளத்தில் பேச எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒருவேளை நான் தெரியாமல் ஏதாவது தவறாக பேச அது உங்களை காயப்படுத்திவிடுமோ என்று கவலைப்படுகிறேன். நான் எப்பொழுதும் சரியாக பேச வேண்டும் என்றுதான் விரும்புவேன்' என்றார்.