'ராமாயணம்' படப்பிடிப்புக்கு மத்தியில் 'அன்னபூர்ணா தேவி' கோவிலில் சாமி தரிசனம் செய்த சாய்பல்லவி
|தற்போது சாய் பல்லவி, 'தண்டேல்' படத்திலும், பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்திலும் நடித்து வருகிறார்.
வாரணாசி,
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
சமீபத்தில், சிவகார்த்திகேயனுடன் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். தற்போது இவர் நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' படத்திலும், பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்திலும் நடித்து வருகிறார். 'ராமாயணம்' படத்தில் சாய்பல்லவி சீதையாக நடிக்க, ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும் நடிக்கின்றனர்.
இப்படப்பிடிப்புக்கு மத்தியில் சாய்பல்லவி வாரணாசியில் உள்ள 'அன்னபூர்ணா தேவி' கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சமீபத்தில், சீதை கதாபாத்திரத்திற்காக அசைவ உணவு சாப்பிடுவதில்லை என பரவிய தகவலுக்கு சாய் பல்லவி மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.