< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
போட்டோகிராபியில் கலக்கும் சதா

17 March 2025 7:13 AM IST
தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருக்கும் நிலையில், போட்டோகிராபியில் கலக்கி வருகிறார் சதா.
சென்னை,
தமிழில் 'ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சதா, கடைசியாக சதா நடிப்பில் 2018-ல் 'டார்ச் லைட்' படம் வெளியானது. தெலுங்கு, கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருக்கும் நிலையில், போட்டோகிராபியில் கலக்கி வருகிறார் சதா. சினிமாவில் கொடிகட்டி பறந்த சதாவுக்கு இப்போது முழுநேர வேலை வைல்ட்லைப் போட்டோகிராபிதான். அவ்வாறு அவர் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோவையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.