< Back
சினிமா செய்திகள்
RT 75 team announces title with first look
சினிமா செய்திகள்

பர்ஸ்ட் லுக்குடன் டைட்டிலை அறிவித்த 'ஆர்டி 75' படக்குழு

தினத்தந்தி
|
2 Nov 2024 11:47 AM IST

'தமாகா' படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து 'ஆர்டி 75' படத்தில் நடிக்கின்றனர்.

சென்னை,

மிஸ்டர் பச்சன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரவி தேஜா தனது 75-வது படத்தில் நடித்துவருகிறார். தற்காலிகமாக 'ஆர்டி 75' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சிதாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இயக்குகிறார்.

இவர் இதற்கு முன் 'வால்டர் வீரய்யா' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். 'தமாகா' படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். 'தமாகா' படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மாஸ் ஜாதரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு மே 9-ம் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்