< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரோமியோ' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு
|8 May 2024 3:14 PM IST
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரோமியோ' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'. இந்த படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பரத் தனசேகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு பரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் 'ஆஹா' செயலியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் 10-ம் தேதி முதல் வெளியாக உள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.