< Back
சினிமா செய்திகள்
கங்குவா பட விழாவில் சூர்யா 45 அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி
சினிமா செய்திகள்

'கங்குவா' பட விழாவில் 'சூர்யா 45' அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி

தினத்தந்தி
|
27 Oct 2024 7:44 AM IST

'கங்குவா' பட விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி 'சூர்யா 45' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டார்.

சென்னை,

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி 'சூர்யா 45' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டார். இது குறித்து அவர் பேசுகையில், 'சூர்யா 45 குறித்து நிறைய பேர் கேட்கிறீர்கள். பயங்கரமா,செம மாஸா அடுத்த வருடம் தரப்படும்' என்றார்.

சூர்யா கங்குவா படத்தைத்தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சூர்யா 44' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்