வெப் சீரிஸில் நடிக்கும் ரிது வர்மா?
|ரிது வர்மா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் ரிது வர்மா. இவர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும், விக்ரம் ஜோடியாக துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்தார். இதனால், இப்படம் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது, ரிது வர்மா ஸ்ரீ விஷ்ணு கதாநாயகனாக நடிக்கும் 'ஸ்வாக்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரிது வர்மா அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை 'ஸ்ரீகரம்' படத்தின் இயக்குனர் கிஷோர் ரெட்டி இயக்குவதாகவும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.