கவர்ச்சியாக உடை அணிவது ஏன்? என்பது குறித்து பகிர்ந்த பாலிவுட் நடிகை
|சமீபத்தில் ரிச்சா சதா நடித்து வெளியான படம் ஹீரமண்டி : தி டயமண்ட் பசார்.
மும்பை,
இந்தியில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'கேங்க்ஸ் ஆப் வஸ்ஸேபூர்'. இப்படம் இரண்டு பகுதிகளாக உருவானது. இதனை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்து இயக்கி இருந்தார். மனோஜ் பாஜ்பாய், நவாசுதீன் சித்திக், ஹுமா குரேஷி, ரிச்சா சதா உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படத்திற்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான உடையில் காணப்பட்டார்.
இந்நிலையில், இப்படத்திற்கு பிறகு ஏன் கவர்ச்சியாக உடை அணிகிறீர்கள் என்ற கேள்விக்கு சமீபத்தில் நடந்த பேட்டியில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இப்படத்தில் நான் நிக்மா என்ற நடுத்தர வயதுடைய கிராமிய பெண்ணாக நடித்திருந்தேன். அப்பாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. இதனால் உண்மையிலும் நான் அப்படிதான் என்று மக்கள் நினைத்தார்கள். நான் நிஜத்தில் அந்த பாத்திரத்தைபோல இல்லை என்பதை தெரியப்படுத்த நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கவர்ச்சியாக உடை அணிகிறேன். என்றார்
சமீபத்தில் ரிச்சா சதா நடித்து வெளியான படம் ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் . இது ஒரு வெப் தொடராகும். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரிச்சா சதாவுடன் சோனாக்சி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், பரிதா ஜலால், சேகர் சுமன், பர்தீன் கான், அத்யாயன் சுமன் மற்றும் ஸ்ருதி ஷர்மா ஆகியோர் நடித்தனர்.