< Back
சினிமா செய்திகள்
சிபி சத்யராஜ் நடித்துள்ள டென் ஹவர்ஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்
சினிமா செய்திகள்

சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்

தினத்தந்தி
|
1 Jan 2025 4:39 PM IST

இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கும் 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

சென்னை,

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான 'வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் தற்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு "டென் ஹவர்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கே.எஸ் சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்