< Back
சினிமா செய்திகள்
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் 2-வது பாடலின் ரிலீஸ் அப்டேட்
சினிமா செய்திகள்

'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 2-வது பாடலின் ரிலீஸ் அப்டேட்

தினத்தந்தி
|
25 Dec 2024 5:48 PM IST

இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் 2-வது பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் 'போட், தி கோட், டீன்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது யோகிபாபு 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இயக்கி இருக்கிறார்.இப்படத்தின் முதல் பாடலான 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.

சமீபத்தில் இப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாவது பாடல் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்