அஜித்தைப் போல் வசீகரமான நபரை இதுவரை கண்டதில்லை - நடிகை ரெஜினா
|அஜித்தைப் போல் வசீகரமான நபரை என் வாழ்வில் பார்த்ததில்லை என்று நடிகை ரெஜினா கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் 'கண்ட நாள் முதல்', 'அழகிய அசுரா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மாநகரம்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்து வரும் இந்த படத்திற்கான அப்டேட்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு படத்தின் போஸ்டர்களும் மற்றும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டனர். விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் ரெஜினா கசான்ட்ரா விடாமுயற்சி படத்தின் சில அப்டேட்களை கூறினார் அதில் 'திரைப்படம் மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு முன் நான் அஜித் சாரை சந்தித்ததில்லை. எல்லோரும் அவரை பார்க்க வேண்டும். அவரைப் போல் வசீகரமான நபரை என் வாழ்வில் பார்த்ததில்லை. திரைப்படம் மிகச் சரியான நேரத்தில் வெளிவரும். இயக்குனர் மகிழ்திருமேனி சிறப்பாக இயக்கியுள்ளார். 90 சதவீத திரைப்படம் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளது. என்னுடைய கதாப்பாத்திரத்தை திரைப்படத்தில் ஆர்வமாக உள்ளேன்' என கூறியுள்ளார்.
விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.
விடாமுயற்சி படத்தின் டீசர் வருகிற நவம்பர் 10 ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது