< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'ஹலோ மம்மி' படத்தின் பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
5 Nov 2024 3:06 PM IST

'ஹலோ மம்மி' படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கி உள்ளார்.

சென்னை,

ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்', விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி', மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இவர் தற்பொழுது 'ஹலோ மம்மி' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்குகிறார். படத்திற்கான கதையை சஞ்சோ ஜோசப் எழுதியுள்ளார். இப்படத்தில் ஷரப் உதீன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு காமெடி கலந்த பேண்டசி திரைப்படமாக உருவாகி உள்ளது.

இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜெகதீஷ், ஜானி ஆண்டனி, பிந்து பேனிக்கர், சன்னி இந்துஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவை பிரவீன் குமார் மேற்கொண்டுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் 'ரெடியா மாறன்' பாடல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்