< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
ரவி தேஜா நடிக்கும் 'மாஸ் ஜாதரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

26 Jan 2025 11:45 AM IST
இப்படம் வரும் மே 9-ம் தேதி திரைக்கு வருகிறது.
சென்னை,
மிஸ்டர் பச்சன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரவி தேஜா தனது 75-வது படமான 'மாஸ் ஜாதரா'வில் நடித்துவருகிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இயக்குகிறார்.
இவர் இதற்கு முன் 'வால்டர் வீரய்யா' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். 'தமாகா' படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். 'தமாகா' படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படம் வரும் மே 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இன்று நடிகர் ரவி தேஜா தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடும்நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.