தமிழ் படத்தில் நடிக்க விரும்பி பிரபல இயக்குனரிடம் கதை கேட்ட ரவி தேஜா?
|ரவி தேஜா தானது 75-வது படத்தில் நடித்துவருகிறார்.
சென்னை,
மிஸ்டர் பச்சன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரவி தேஜா தானது 75-வது படத்தில் நடித்துவருகிறார். ரவி தேஜாவின் 75-வது படத்தை சிதாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பானு போகவரபு இப்படத்தை இயக்குகிறார்.
இவர் இதற்கு முன் வால்டர் வீரய்யா திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். 'தமாகா' படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். 'தமாகா' படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. அந்த படப்பிடிப்பின்போது நடிகர் ரவி தேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரவி தேஜா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழ் படத்தில் நடிக்க விரும்பி பிரபல இயக்குனர் சுந்தர் சியிடம் நடிகர் ரவி தேஜா கதை கேட்டதாக தெரிகிறது.