< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ராஷ்மிகா நடிக்கும் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
|8 Dec 2024 10:13 AM IST
புஷ்பா 2 படத்தை தொடர்ந்து 'தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படம் ஒன்றில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல கதாநாயகியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் புஷ்பா: தி ரூல்'. இப்படம் இதுவரை ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 'தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படம் ஒன்றில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்த படம் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகிறது.
சமீபத்தில், ராஷ்மிகாவின் முதல் தோற்றம் வெளியான நிலையில், நாளை இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அதன்படி, நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.