சினிமா செய்திகள்
ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது நடிகை ராஷ்மிகாவுக்கு  காயம்
சினிமா செய்திகள்

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது நடிகை ராஷ்மிகாவுக்கு காயம்

தினத்தந்தி
|
10 Jan 2025 6:35 PM IST

நடிகை ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாறியுள்ளார்.இவர் நடித்த குபேரா, சிக்கந்தர் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

இவர் ஜிம்மில் மேற்கொள்ளும் பல்வேறு உடற்பயிற்சி வீடியோக்களை தனது சமூக வலைத்தளபக்கித்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது நடிகை ராஷ்மிகா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவர்கள் ராஷ்மிகாவை ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளதாகவும் அதனால் ராஷ்மிகாவின் படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்