< Back
சினிமா செய்திகள்
Rashmika Mandanna gets mobbed by fans, handles it with grace
சினிமா செய்திகள்

விமானநிலையத்தில் ராஷ்மிகாவை சூழ்ந்த ரசிகர்கள் - வீடியோ வைரல்

தினத்தந்தி
|
13 July 2024 12:39 PM IST

மும்பை விமான நிலையத்தில் ராஷ்மிகாவுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் சூழ்ந்தனர்.

மும்பை,

தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். பல மொழிகளில் வெளியான 'புஷ்பா' அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் 'குபேரா' படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் ராஷ்மிகா நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், ராஷ்மிகா மந்தனாவை மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரசிகர்கள் செல்பி எடுக்க அவரை சூழ்ந்து கொண்டனர். அதில் ஒரு ரசிகர் ராஷ்மிகா மந்தனாவின் கையை தொட்டு செல்பி எடுக்க முயன்றார். அதனால் ராஷ்மிகா அசவுகரியமாக உணர்ந்தார்.

இருந்தபோதிலும், அந்த சூழ்நிலையை அமைதியாகவும், பணிவாகவும் கையாண்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்