< Back
சினிமா செய்திகள்
Rashmika Mandanna calls Animals Rannvijay a ‘stupid man’ for cheating on his wife, advises women to trust ‘good men’
சினிமா செய்திகள்

'ஒரு முட்டாள் மனிதனை நம்புவது...' - ராஷ்மிகா மந்தனாவின் பதிவு வைரல்

தினத்தந்தி
|
14 Jun 2024 12:38 PM IST

தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் நடித்த 'அனிமல்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

சமீபத்தில், ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் அனிமல் படத்தில் நடித்த ராஷ்மிகாவுடன் ரன்பீர் கபூர் பேசும் வீடியோவையும், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு திரிப்தி டிம்ரி கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும் வீடியோவையும் சேர்த்து வெளியிட்டு 'ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்' எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, ரசிகரின் அந்த பதிவிற்கு மறு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது பயங்கரமானது. நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல்,'என தெரிவித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்